ஒரு பானைக்கும் மண்ணிற்கும் காரிய காரண சம்பந்தம் எப்பொழுதும் எப்படி இருக்கிறதோ
அப்படியே வியவஹார உலகிற்கும், பிரம்மத்திற்கும் அதே சம்பந்தம் இருக்கிறது,
இது சுருதியாலும், யுக்தியாலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
பானை முதலிய மண்ணாலான பாண்டங்கள் எப்படி
மக்கள் அறியாமற் போனாலும் மண்ணேயாகுமோ அப்படியே
மக்கள் அறியாமற்போனாலும் அவர்கள் செய்யும் செயலெல்லாம்
பிரம்மத்தினிடமே பிரம்மத்தின் மூலமே நிகழ்கின்றது.