எல்லாப் பொருள்களும் அதில் பிணைக்கப்பட்டுள்ளன.
எல்லாச் செயல்களும் அந்த அறிவுடன் தொடர்புள்ளன,
பாலில் எங்கும் நெய் வியாபித்திருப்பது போல் பிரம்மம்
உலகில் எங்கும் வியாபித்திருக்கிறது.
ஸ்தூலமாயில்லாமலும் ஸூக்ஷ்மமாயில்லாமலும்,
நீளமாயில்லாமலும், குட்டையாயில்லாமலும்,
பிறப்பில்லாமலும், தேய்வில்லாமலும், வடிவும் குணமும்
வண்ணமும் இல்லாமலும் எது உளதோ அதை
பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.