எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு
விளக்கு வேண்டப் படுவதில்லையோ
அப்படியே அறிவு வடிவான ஆத்மா
தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு
அறிவை வேண்டுவதில்லை.
ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால்,
ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு
பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது.
தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும்
பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.