(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம்
இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும்,
ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும்
எங்ஙனம் பிறவியை அடைவான்.
ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும்
தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ,
தள்ளத்தக்கதோ ஆகாது.