சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய கிரணங்களைப் போலுள்ளது. அது விரும்பிய வரத்தையளிப்பதில் கற்பகவிருக்ஷத்தைப் போலுள்ளது. அது மனதிலுள்ள துன்பத்தை அறவே போக்கி விடுகிறது. மஹா விஷ்ணுஸ்வரூபியாகிய என் குருநாதர் சூரியனைப் போல் என்னுடைய மனவெளியில் பிரகாசித்துக் கொண்ட அஞ்ஞான இருளைப் போக்கி ஞானானுபவமாகிற தாமரையை மலரச் செய்கிறார். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaJune 14, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅஞ்ஞானம்முனிவன்ஸமாதி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பிரமாணம் அப்படீன்னா என்ன 3NextNext post:யோக மஞ்சரி.5 துருதுரா யோகம்Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023