தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படம் துன்பம்
பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஆக்கப்பட்ட துன்பமோ
எனின் தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாதது.
கட்டுப்படான உணவும் மருந்தை உட்கொள்ளுதலும் எந்த நோயாளியால்
பின்பற்றப்படுகிறதோ அவனுக்க உடல் நலம் கைகூடுவது காணப்படுகிறது.
மற்றொருவனால் அனுஷ்டிக்கப்பட்ட இச்செயல்களால் இவனுக்கு உடல்
நலம் சிந்திப்பதென்பதில்லை.

