ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன்.
மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று,
மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன்.
குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய்,
அழுக்கும், ஆசையும் அற்றவனாய்,
மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.