கு ரு வு ம், சீ ட னு ம்
வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும்,
ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில்
சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும்,
விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும்,
காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும்,
தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ
அவரே சிறந்த குரு.
அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை
முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில்
அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்
கேட்டுக் கொள்ள வேண்டும்.