நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான்
செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான்.
பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன்,
நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை,
ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை.
துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை,
ஏனெனில் நான் மனதன்று.
உபநிஷதம் கூறுகிறது,
அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன்,
உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன், அழிவற்றவன்.
என்றுமுள்ளதாய் மாசற்றதாய், பற்றற்றதாய் ஒன்றேயாகிப் பிளவு படாததாய்,
இரண்டற்றதாய், ஆனந்தமும், ஸத்தியமும், அறிவும்,உருக்கொண்டதாய்,
அளவு படாததாய் உள்ள பரப்பிரம்மம் நானே.