பிரணயாமம், மனதை உள்முகமாய்த் திருப்புதல், அழியும் பொருளையும்
அழியாப் பொருளையும் ஆராய்ந்தறிதல், ஜபமும், ஸமாதியும் கூடுதல்
ஆகிய மகத்தான ஸாதனைகளில் உன்னுடைய முழுமனதையும் செலுத்து.
தாமரையிலை மேலுள்ள தண்ணீர் மிகவும் சஞ்சலமானது.
அதே மாதிரிதான் ( உடலில் ) உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது.
உலகனைத்தும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டடுத்
துன்பத்தால் கொல்லப்படுகிறதென்பதை அறிவாயாக.