நான் பிராணன் எனப்பட்டவனன்று, நான் ஐந்து வாயுக்களன்று, ஏழு தாதுக்களுமன்று,
ஐந்து கோசங்களுமன்று, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் எனப்படுவையுமன்று,
அறிவும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.
எனக்கு விருப்பும், வெறுப்புமில்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, பேராசையும்
மதிமயக்கமுமில்லை, கொழுப்பும் மாச்சரிய பாவனையுமில்லை, அறமும், பொருளும்,
இன்பமும், வீடும் இல்லை. அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்