வெற்றி – இது ஒரு சொல், ஆனால் இதை அடைய நீ என்னன்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அது தெரிந்தால் அதாவது வெற்றிக்குப் பின் இருப்பவைகளை நீ தெரிந்து கொண்டால்
உன் முன் வெற்றி நிற்கும்,
முதலாவது – பார் – எதை என்று நீ கேட்டால் உன்னை என்பதே பதில்
முழுவதும் உன்னைப் பார். உன் அனுமதி வேண்டாமல், இயங்கும் ரத்த ஒட்டம் இதயத் துடிப்பு போன்றவற்றைப் பார்.
அப்போது உனக்குப் புரியும் இறைவனின் சக்தியை அதை முழுமையாகப் பார்.
அடுத்தது,
புரிந்து கொள். உனது வாழ்வின் இலக்கு, அதாவது குறிக்கோளை புரிந்து கொள்.