நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன்
அப்படி என்னை பார்க்கும் போது
நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன்
எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன்
அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும்
பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன்
எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக
கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன்
என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை
அதனால் கண்டிப்பாய் என் துறையில் நான் வெற்றிபெறுவேன்
எனது செயல்களை சரியாய் செய்ய
எனது செயல்களை மேலும் மேலும் மெருகூட்ட
எல்லா முயற்சிகளையும் விடாமல் எடுப்பேன்