நண்பர்களே!
உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள்.
மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது.
அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும்.
இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை.
இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர முடிகிறது.
ஆர்வ மிக்க உங்கள் கனிவான வரவேற்ப்புக்கு நன்றி. அமைதியும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வோம்.
நண்பர்களே, இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடிய வகையில் பேச முடியாது.
எனவே இன்றைக்கு என்னைப் பார்த்தவரையில் திருப்தியடையுங்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன்.
உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி.