நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை
மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள
ஆற்றலைக் கிளார்ந்து எழ செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை
உபதேசித்தேயாக வேண்டும்
அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன்.
வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை.
அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும்
ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.
