எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே
ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான்,
அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான்
ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ?
மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள்.
