நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும்
பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை
அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன்.
துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும்
அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும்.
அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன்.
ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல
ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது.
போதுமான அளவு நாம் அழுதாயிற்று.
