நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள்
யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால்,
மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும்
என்று அவர்கள் கேட்கிறார்கள்
நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல்
அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல்
அந்த ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்?
