அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா?
இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ
அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை.
இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே;
இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும்
உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள் உள்ளன.
இவற்றிற்குத் தீர்வு காண இந்தியா ஒருபுறமும்,
பிற நாடுகள் மறுபுறமுமாக நின்று முயற்சியில் ஈடுபடுகின்றன.