மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி
உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது.
அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு
அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது.
மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது
அங்கே சர்வ சாதாரணமான ஒன்று.
தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள்
அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி,
இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம்.
