வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு
மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில்
இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர்,
ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி –
இருப்பவர் ஒருவரே,
ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள்
என்று கூறினார்.
