தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது
இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது.
இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு,
அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது.
இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான்,
நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது.
ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.