அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது;
நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது.
ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி
, மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும்
அதனால் நம் மதத்திற்க்கு எந்தவித தீங்கும் இல்லை.
அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும்.
ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல.
உலகிலுள்ள அனைவரையும் ஒரே மனிதரைச் சுற்றித் திரளும்படிச் செய்ய முயல்வது வீண்.
ஏன் உலகம்தழுவியதும்,
அழிவேயில்லாத உண்மைகளின் கீழும்கூட
உலக மக்கள் எல்லோரையும் ஒன்று சேர்ப்பது என்பது முடியாத ஒன்று.