நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல்
நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும்,
அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப
எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது.
நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை,
மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது
இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?