பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று;
உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக,
இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச், ஆளும் வர்க்கத்தினரின் உடைமை.
எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள்.
கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.
பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள், போர்க்கலை,
வாணிபம் என்று ஏதாவது ஒன்று மகத்தான தேசிய ஆற்றலாகத் திகழ்கிறது
அதுவே அந்த நாட்டின் இதயமாகத் துடிக்கிறது.
இரண்டாம்பட்சமான எத்தனையோ அலங்காரங்களுள் மதம் என்பதும் ஒன்று,
அவ்வளவுதான்.