நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து,
இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன்.
அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது ,
சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது,
மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது.
ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும்
அதன் தேசியவாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான
உறுதியான அடித்தளப்பாறையாகவும் மதமே உள்ளது.