நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை.
புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று
ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன.
சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன.
ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு
பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று
எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத் தாங்கியுள்ளது;
இருந்தும் பிழைத்திருக்கிறது.
ஏன்? ஏனெனில் அது துறவு என்ற பக்கத்தை எடுத்துள்ளது.