எந்த நோக்கமும் இல்லாமல் எந்த பயனையும் எதிர்பாராமல் உடலை வருத்திக் கொள்வது
அப்படி வருத்தி கொள்வதின் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பது
இலக்கில்லாமல் ஓடி, ஓடி மூச்சு இளைக்க, இளைக்க நிற்கும் போது உண்டாகும் சுகம்,
சந்தோஷம் நமது சிறு பிராயத்திலேயே முடிந்து விடுகிறது.
மூச்சு இளைக்கிறதே என்று விளையாடமல் இருக்க முடியுமா?
எந்த குழந்தைகள் தான் அப்படி இருக்கிறது
விளையாடி, விளையாடி இளைக்கிற மூச்சு ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்
விளையாடாமலே சும்மா இருக்கும் போது இளைத்தால் அது வியாதி.