குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும்.
குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர்.
குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும்
அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர்
சிறந்த செல்வம் பெற்றவர்.
குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர்
பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர்.
பொருட் சேர்க்கை பாராட்டு புகழும் கூடப்பெறுவர்.
குருவும், சூரியனும் வலுத்திருந்தால்
வாழ்நாள் முழுதும் தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாசம், நேசம் நிலைத்திருக்கும்.