குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள்.
குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின்
அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர்.
குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது. குழந்தைகள் குணம் கெட நேரிடும்.
குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும்,
சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர்.
குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மீன ராசிகளில் இருப்பதை பார்த்தால்
எல்லா பாலாரிஷ்ட தோஷங்களும் நிவாரணம் ஆகும்.