குரு புத்திரகாரகர், 5ம் இடத்தில் புத்திர ஸ்தானத்தில் வீட்டில் வீற்றிருந்தால்
அந்த ஜாதகர் ஒரே ஒரு புத்திரனைப் பெறுவர்.
குரு சந்திர கேந்திரத்தில் இருந்தால் ‘’ கஜ கேசரி யோகம் ‘’ ஏற்படும்.
செல்வம், பெயர், புகழ் ஏற்பட்டு செல்வாக்குடன் வாழ்வர்.
குரு, தன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ சந்திரனுக்கு, லக்னத்திற்கு கேந்திர கோணத்தில் இருப்பின்,
செல்வந்தராகவும், நீண்ட ஆயுள் உடையவராகவும் திகழ்வர்.
குரு சந்திரனுக்கு 6,8, 12ல் வீற்றிருந்தால் சகடை யோகம் உண்டாகிறது.
சகடையோகத்தில் ஒருவர் பிறந்தால் அவருக்கு மணவாழ்வு மகிழ்ச்சியற்றதாக இருக்கம்.
புத்திர தோஷம் ஏற்படும்.