குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நால்வரும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினதிலேயே இருப்பார்களானால்
அப்பெண் மிக அதிர்ஷ்டசாலி, நற்குணவதி புத்திர பாக்கியத்துடன் வாழ்வர்.
வியாழனின் 5ம் வீட்டையோ அல்லது லக்னத்திற்கு 5ம் வீட்டையோ குரு, செவ்வாய் இருவரும் பார்ப்பின்
புத்திர சோகத்தால் அந்த ஜாதகர் அவதிபடுவவர்.
குருவானவர் சந்திரனை கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ இருந்து பார்வை செய்யின்
அந்த ஜாதகர் ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்று
பல ஜோதிட புத்தகங்களை எழுதி பேறும் புகழும் பெறுவர்.