விமர்சனம் செய்யுங்கள் அதே நேரம் வாழ்த்தவும் செய்யுங்கள்
கேள்விகள் கேளுங்கள் அதே நேரம் பதில்களை நம்புங்கள்
சொன்ன பதில்களை கண்காணியுங்கள்
அப்போது பதில்கள் பயனுக்கு வரவில்லையென்றால்
கண்டியுங்கங்ள கண்டனம் செய்யுங்கள் புகார்களை சொல்லுங்கள்
அதே நேரம் புன்னகை செய்யுங்கள்
புதியதை முயலுங்கள் அதே நேரம் தெரிந்ததை செய்து கொண்டே இருங்கள்
முன்னேறி செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் நட்பு பாராட்டுங்கள்
ஒரு வேளை சறுக்கி விழ நேர்ந்தால் கீழிருந்து தாங்கி பிடிப்பார்கள்.
தவறு செய்த ஒருவருக்கு நம் விமர்சனம்
சரியான வழியை காட்டவில்லை என்றால்
அந்த விமர்சனத்தால் பயனேதும் இல்லை.