விபரீத கரணி
விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும்.
கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால்
பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி,
விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும்.
கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்
.ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன்
பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம்.
அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து
பிருஷ்ட பாகத்தை தூக்கி செய்யலாம்.
காலை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.
ஒருமுறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம்
சாதாரண மூச்சு.
கீழே இறங்கும் போது காலை மடக்கிக் கைகளால் பிருஷ்ட பாகத்தை வழுக்கி இறங்க வேண்டும்.
பலன்கள் –
முதுமையைக் போக்கும்.
தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும்
. தொந்தி, மலச்சிக்கல், கல்லீரல் கேடு,
கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்குகும்.
பெண்கள் கர்ப்பப்பை நோய் வராமல் தடுக்கும்.
சுக்கிலம் பலப்படும்.
கெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும்