வாழ்வென்பது உயிர் உள்ளவரை..
தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி..
இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்
இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை..
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை..
அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .
மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…
உயிர் பிரிய தான் வாழ்வு.. ஒரு நாள் பிரியும்..
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.
உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே..
உன் குழந்தைகளை பேணு.. அவர்களிடம் அன்பாய் இரு.
அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே…
அடிமையாகவும் ஆகாதே..