உண்மையில், நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப்பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால்
நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம்.
நாம், உடலை பற்றி அறிந்து கொண்டால் தேவையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.
மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இது இரண்டை பற்றியும் அறிந்து கொண்டவர் எல்லாம் அறிந்தவர் ஆகின்றனர்.
