மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது.
தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை தீமைகளை உண்டாக்குகிறது.
தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது.
அதாவது, பசி, தூக்கம், போன்றவை, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும்
உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது.
அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில்
ஆசை நுழையும்போது, நன்மையோ, தீமையோ உண்டாகிறது.
