வாழ்க்கை என்றால்
குடும்பம் என்றால்
கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது.
சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான்
சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது.
இந்த உலகத்தில் எந்த இருவருக்கும்
இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும்
ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது
காரணம்
அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.