கோமு -ஒரு சந்தேகம்
காமு -என்ன
கோமு- வாழ்க்கைங்கிறது என்ன
தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா
இல்ல
தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா?
காமு- ரெண்டும்தான்
கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா
இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு
காமு- இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு
மரணத்தோட ஞாபகமே வராது
துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு
மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும்
இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க
கோமு -நான் கேட்டது மரணம் பற்றி இல்லை
வாழ்க்கையைப்பற்றி
காமு- எனக்கு புரிஞ்சுது ஒண்ணுதான்
வாழ்க்கையில மரணம் இருக்கு
அது புரிஞ்சுதுன்னா
வாழ்க்கை அப்படின்னா என்னங்கிற கேள்விக்கு
பதில் வந்துரும்
அதுமட்டுமல்ல
வாழ்க்கையை எப்படி வாழணும்னு தெரிஞ்சிரும்