நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை. இந்த நொடி முதல் யாவும் மாறும், மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே…
எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்….
செயல்கள் மாற விளைவுகள் மாறும்….
விளைவுகள் மாற வாழ்க்கையே மாறிவிடும்.
வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டு வளமாக வாழ்வோம்…
