காமு; வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை
கோமு; என்ன தனியா ஏதோ பேசிட்டு இருக்க
காமு ; நீ எப்ப வந்த?
கோமு; நீ வர வரன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனேயே வந்துட்டேன்
காமு; உனக்கு தான் எந்த பக்தியும் கிடையாதே அதனால் அத விட்று
கோமு ; நீ என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறேன்னு நினைக்கிறேன்
காமு; என்ன
என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறன் நான்
கோமு ; உன்னோட அளவுக்கு யாருக்கும் தேச பக்தி இல்லேன்னு நினைச்சிட்டு
அத சொல்லாம வேற என்னென்னவோ பேசறேன்னு சொன்னேன்
காமு ; ஆமா அப்படிதான்னு வச்சிக்கோயேன்,
என்னோட தேச பக்தி அப்பழுக்கற்றது உனக்கெங்க அது தெரிய போகுது
கோமு; சரி எனக்கு தெரிய வேண்டாம்
காமு; நல்ல மனசு இருக்கிறவனுக்குத் தான் தேச பக்திங்கற சிந்தனையே வரும்
கோமு; உன்னோட தேச பக்திய நான் என்னைக்காச்சும் குற்றம் சொல்லியிருக்கிறேனா?
காமு; இல்லை
கோமு; அப்ப ஏன் நீ என்னை குத்தம் சொல்ற
காமு; தேசத்த நேசிக்காத உன்னை குத்தம் சொல்றது தப்பா?
கோமு; நீ தேச பக்தின்னு சொல்லி தேசத்த ஆளுரவங்களை துதி பண்ணற,
நான் பண்ணறது இல்லை அது தான் உனக்கு என் மேல கோபம்
காமு; அவங்களோட பக்திய குறை சொல்லாத, அவங்க மட்டும் இல்லைன்னா…..
கோமு; உணர்ச்சி வசப்படாதே,
உனக்கு வேனா தேச பக்தி இருக்கலாம்,
ஆளுரவங்களுக்குன்னு சொன்னியே அந்த இடம் தான் உனக்கும் எனக்கும் இடிக்குது
காமு; உனக்கு எல்லாமே இடிக்கும்
கோமு; இடிக்கிறத இடிக்குதுன்னு சொல்லாம வேற என்ன சொல்றது
காமு; இங்க பார் என்ன மாதிரி தேச பக்தியிருக்கிறவங்க தேர்தெடுத்த
தேச பக்தியிருக்கிறவங்களோட அரசு நடக்குது,
அதுலே போய் இடிக்குது புடிக்குதுன்னு சொன்னே கெட்ட கோபம் வந்துரும் எனக்கு
கோமு; கோபம் சத்ரு, அத விட்ரு, இப்ப நான் சொல்றேன் கோபப்படாம கேளு
காமு ; சரி சொல்லு, நீ என்னத்தான் சொல்றேன்னு பாக்கிறேன்
கோமு; தம்பி, அதிக இடங்களை பிடித்து சர்வ வல்லமையான அரசு
யதேச்சதிகார பாதையில் ராஜபாட்டை போட்டு தன்னுடைய
ஆட்சி நீடிப்பையும்
அதிகாரங்களையும்,
ஆடம்பரங்களையும்,
அபிலாஷைகளையும்,
மூர்க்கத்தனமான லஷ்யங்களையும்
நிலை நாட்டுவதிலேயே தான்,
தன் கருத்துக்களையும்,
செயல்பாடுகளையும்
செலுத்திக்கொண்டிருக்குமே தவிர
மக்களின்
உரிமைகளையோ,
நன்மைகளையோ
சிறிதும் பொருட்படுத்தாது
மக்களுக்கு நன்மை செய்வதாக சொல்லிக் கொண்டே
மறைமுகமாக மக்களை மிதித்து நசுக்கிக் கொண்டு,
தன்னுடைய சொந்த நன்மைகளைத் தான்
அத்தகைய அரசாங்கம் கவனித்துக் கொண்டிருக்கும்,
காமு; ஏய் இரு இரு, ரொம்ப பேசாதே, ரொம்ப சிக்கலான காலகட்டத்துல கூட
தைரியமும், உதவியும் பண்ணாது அப்படின்னு சொல்லறயா?
கோமு; கண்டிப்பா
இப்பவும் சொல்லறேன்,
இனியும் சொல்லறேன் கேட்டுக்க.
புயல்,
வெள்ளப்பெருக்கு,
மழையின்மை,
கடும் நோய்,
பஞ்சம் வரும் நெருக்கடியான கால நிலைகளில் கூட
நன்மையும், உதவியும் செய்வதாகப் பேசி பாசாங்கு செய்யுமே தவிர
மனப்பூர்வமா செய்யாது,
அந்த மாதிரி சூழ்நிலையில் மக்களில் யாரேனும் தான் அதை செய்வாங்க,
அரசு செய்யறமாதிரி பேசும் நடிக்கும்
அரசு செய்யாது.
தம்பி காமு; உண்மையாய் கஷ்டப்பட்டவன் தியாகி.
பென்ஷனுக்கு அலையறதும்
அத சொல்ல மட்டுமே செஞ்சு
அரசுல பெரிய பதவியில இருந்துகிட்டு
சுகபோக பாக்கியங்களை அனுபவிக்கின்றவங்களை
உற்றுப்பார்
உணரப்பார்
அப்ப புரியும் நான் என்ன சொல்றேன்னு.