உலகாதாய இலக்குகளை அடைய அதை பற்றிய வெளி உலக அறிவை பெற வேண்டிய அவசியம் உள்ளது.
நாம் நம் வாழ்வை அதனோடு மட்டுமே என்று இருக்கும் போது
அதிலிருந்து நமக்கு கிடைக்கும் லோகாதாய பயனால் நம்முள் அகங்காரம் வளர்கிறது.
அது நாம் பிறறை மதிக்க வேண்டும் மூத்தோர்களை
குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது
அது மட்டுமல்லாமல் சுய நலமும் எவேராடும் ஒட்டாத பண்பும்
எதையும், எவரையும் மிக அலட்சியபடுத்தும் தன்மையும் மிக மேலோங்கி விடுகிறது.
அதனால் வாழ்க்கை கடைசியில் வறண்டு விடுகிறது.