லக்கின பாவம்
உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை,
அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ்,
வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும்,
அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும்.
அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும்.
அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான்
அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும்.
வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது.
அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான்.
உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும்.
இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.