இந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல.
சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர்.
ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு ‘வளம் பெற வேண்டுமா?
சகித்துக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,
‘பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை.
ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது
(மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும் விதமாகவும் இருப்பது.
