‘உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது.
அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம்.
அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம்.
அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி,
‘நான் என்னால் முடிந்த அளவு செய்தேன்,
ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்’ என்று சொல்ல உங்களால் முடியவேண்டும்.
இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான்
நமக்கு இருக்கும் சவால்.
நாம் அந்த காரியத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால்,
யார் செய்யப் போகிறார்கள்?
இப்போது செய்யவில்லை என்றால் பின் எப்போது?
