ஜெனன லக்கினாதிபதிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சிக் கோள்களும், சந்திரன் இருந்த ராசிக்கு 3 – ம் வீட்டோன் உச்சம் பெற்று இருந்தால், 30 வயதிற்கு மேல் சகல விதமான செல்வங்களோடு சௌக்கியமாக இருப்பான்.
பாக்கியாதிபதி 3 – ம் இடத்திலிருக்க அவனை குரு பார்க்க உள்ள அமைப்பிற்கு சர்ப்பயோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயது முதல் 9 வயது வரை பாக்கியத்தோடு இருப்பான்.
5 – ம் வீட்டோன் 3, அல்லது 11 – ம் வீட்டிலிருக்க எங்கேனும் குருவோடு புதன் கூடியிருக்க சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற சந்திரன் 9 – லிருக்க கந்தவர்வ யோகம் என்று பெயர். இதன் பலன்
6 – வயதிலிருந்த 14 – யோகத்தோடு இருப்பான்.
ஜெனன லக்னாதிபதி எவர் அங்கீசம் பெற்றாரோ அந்த அங்கீசாதிபதி 9 – ஆம் வீட்டிலிருக்க 9 – ஆம் வீட்டோன் உச்சம் பெற்றிருக்க உள்ள அமைப்பிற்கு ம்ருக யோகம் என்று பெயர். இதன் பலன் 7 – வயது முதல் 16 வயது வரை யோகத்தோடு இருப்பான்.
12 – ஆம் வீட்டதிபதி 12 – ம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்க 8 – ஆம் வீட்டோன் 4 – லிருக்க அல்லது 12 – ம் வீட்டிலிருக்க அவனை 9 – ஆம் வீட்டதிபதி பார்க்க இதற்கும் ம்ருக யோகம் என்றே சொல்லுவர். இதன் பலன் 40 வயது முதல் 72 – வயது வரை யோகத்தோடு இருப்பான்.