Skip to content
யோக முத்ரா — YOGA MUDRA
You are here:
- Home
- யோகா
- யோக முத்ரா — YOGA MUDRA
யோக முத்ரா — YOGA MUDRA
பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு
கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும்.
நாடி நெஞ்சைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு
மூச்சை மெதுவாக வெளியே விடடவாறே
முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும்.
சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும்.
நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.
பத்மாசனம் செய்ய முடியாதவர்கள்
சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தைப் பயிலலாம்.
ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம்.
தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள்
முடிந்த அளவு முயற்சித்துவிட்டு, விட்டுவிடவும்.
கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.
பலன்கள் –
முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும்.
கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும்.
மலச்சிக்கல் நீங்கும்.
தாது இழப்பு, பலக்குறைவு நீங்கும்.
நீரழிவு நோய் நீங்கும்.
தொந்தி கரையும்.
முதுகெலும்பு நேராகும்.
அஜீரணம், மலச்சிக்கல் ஒழியும்
நுரையீரல் நோய்க்கிருமிகள் நாசமடையும்.
பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.
வயிற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக்கூடாது.
Go to Top