தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும்,
பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி
என்ன சொல்கிறது இந்த பாடல்
தன்னை அறிய வேண்டும் என்கிறது
தன்னை அறிவது என்றால் என்ன
தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல்
அது தோன்றுமிடம் அறிதல்
எதனால் தோன்றியது என்றும் அறிதல்
அப்படியானால்
உணர்வுகள் எத்தனை விதம்
உணர்வுகள் பலவிதம்
அதில்
சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம்
காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது
இதில்
நல்லது, கெட்டது கிடையாது,
ஆனால் பிரித்து வைத்திருக்கிறார்கள்
இவைகளை அறிந்து புரிந்து
உணர்ந்து நகர்ந்து விடவேண்டும்
அதுதான் வெற்றி.