இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான்
அதில் சந்தேகம் இல்லை
ஏனென்றால்
இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை.
இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி
அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது.
மனம் என்ற ஒன்று
உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும்
அது மனிதனுக்கு தெரியவில்லை.
தெரிவதில்லை
அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை.
இதை தான் கண்ணதாசன் தன் பாடலில்
அழகை காட்டும் கண்ணாடி
மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.
இப்படி தன் இருப்பை வெளிப்படுத்தாமல்
இயக்கத்தை வெளிப்படுத்தும் மனம்
இறப்பை பற்றி கொண்டு இருக்கிற நினைவே
பயமாக மனிதனிடம் கொண்டுள்ளது
என தோன்றுகிறது.