இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால்
செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே
அப்படி திரிய
அது சரியாய் தெரியாத காரணத்தால்
அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள்
செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என
சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன.
இது எப்படி இருக்கிறது என்றால்
நரியையும் பார்த்ததில்லை
அதன் கொம்பையும் பார்த்ததில்லை.
நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை
ஆனால்
நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.